திரைச்செய்திகள்
Typography

தனது நிலைமை இப்படியாகும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் இயக்குனர் பாலா. இவரது பெயரை கேட்டாலே ச்சும்மா கலங்குதுல்ல... என்று ஓடி எஸ்கேப் ஆகிவிட்டார்கள் பல ஹீரோக்கள். அதுவும் பாலாவின் தம்பிகள் என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட சூர்யா, விக்ரம், விஷால், ஆர்யா ஆகிய நால்வரும் தெறித்து ஓடியதுதான் வியப்பு.

வேறு வழியில்லாமல் விஷ்ணு விஷால், சிம்பு லெவலுக்கு இறங்கி வந்த பாலாவுக்கு, அங்கும் துரதிருஷ்டம். “எங்களால உங்களுக்கும் பிரயோஜனம் இல்ல. உங்களால எங்களுக்கும் பிரயோஜனம் இல்லை” என்று ஒதுங்கிக் கொண்டார்களாம் இவர்கள். இந்த நிலையில்தான் அந்த படு பயங்கரமான முடிவை எடுத்திருக்கிறார் பாலா.

சாட்டை, கமர்கட், போன்ற படங்களில் நடித்த யுவன் என்ற இளைஞரை அழைத்திருக்கிறார். நடிக்க சொன்னால், நடிப்பு இன்ஸ்ட்டியூட்டாகவே மாறிவிடும் தம்பி யுவனை இவர் எப்படி கண்ட்ரோல் பண்ணி எப்படி நடிக்க வைத்து உரு தேற்றப் போகிறாரோ? அதுதான் பாலாவின் தனிப்பட்ட திறமையாச்சே என்றாலும், கடையாணி புடுங்கிய தேர்களையெல்லாம் ஓட வைப்பதுதான் எப்படி என்று குழம்பி நிற்கிறது கோடம்பாக்கம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்