திரைச்செய்திகள்
Typography

குடும்பஸ்தன் ஆகிவிட்டார் யோகிபாபு. ஆனால் அந்தஸ்தை எட்டுவதற்குள் அவர் படுத்திய பாடு... யப்பா யப்பப்பா. ‘ஆமாய்யா... கல்யாணம்தான்.

எனக்கு கல்யாணம்தான்’ என்று சொல்வதற்கு நடிகைகள் அஞ்சலாம். ஆனால் யோகிபாபு ஏன் அஞ்சினார் என்பதுதான் ஆச்சர்யம். ஒரு இணையதளம் யோகிபாபுவை தொடர்பு கொண்டு, ‘உங்களுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிருச்சாமே?’ என்று கேட்டது. ‘ஆமாங்க...’ என்றார். அதை நம்பி யோகிபாபுவுக்கு கல்யாணம் என்று நியூஸ் போட்டார்கள். உடனே தனக்கு வேண்டப்பட்ட நாளிதழ் நிருபரை அழைத்து,

‘அப்படியெல்லாம் இல்ல. அவங்க தப்பா போட்டுட்டாங்க’ என்று பேட்டி கொடுத்தார் பாபு. அவ்வளவுதான்... கடுப்பான இணையதளம், ‘பின்னே ஏன் எங்ககிட்ட அப்படி சொன்னீங்க?’ என்று எகிற, மறுபடியும் நாளிதழுக்கு போன் அடித்த பாபு ‘அந்த செய்தியை மாற்றி போட முடியுமா?’ என்றார்.

இந்த முறை டின் இந்தப் பக்கம் நசுங்கியது. இப்படியே சமாளித்து வந்த யோகிபாபுவுக்கு திருமணம் ஆகி தேனிலவுக்கும் போய் வந்துவிட்டார் என்பது தனி செய்தி. அதிருக்கட்டும்... இன்னொரு முக்கிய நியூஸ். இந்த கல்யாணத்திற்கு இன்டஸ்ட்ரியை சேர்ந்த யாரையும் அழைக்கவில்லை அவர்.

கோபித்துக் கொள்வதற்கு முன் ஒரு ஐடியா செய்த யோகிபாபு, ஒவ்வொரு சினிமா நடிகர் நடிகைகளுக்கும் டெக்னிஷியன்களுக்கும் வாய்ஸ் மெசேஜ் போட்டுவிட்டார். விரைவில் ரிசப்ஷன். அதற்கு அழைக்கிறேன் என்று.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்