திரைச்செய்திகள்
Typography

ஒவ்வொரு நிமிஷமும் லட்சமும் கோடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் விஜய்சேதுபதி.

சுமார் பத்து படங்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். இதில் தெலுங்கு, கன்னடம் என்று வேறு லாங்குவேஜ் படங்களும் வரிசை கட்டுகிறது.

இந்த லட்ணத்தில் இன்னொரு சோகம். விஜய் சேதுபதி 2 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தபோது அவருக்கு கதை சொன்னார் டைரக்டர் சேரன்.

இப்போது விசே வின் சம்பளம் பனிரெண்டு கோடி. நடுவில் டசன் கணக்கில் படங்களில் கமிட்டாகியிருக்கும் சேது, ‘நம்ம சம்பளத்துக்கு கட்டுப்படியாகிற தயாரிப்பாளரோட வாங்க’ என்று கூறிவிட்டாராம் சேரனிடம். தயாரிப்பாளர் பிடிப்பதற்குள் சேதுவின் சம்பளம் 15 சி ஆனாலும் ஆச்சர்யமில்லை.

கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் ஒண்ணு கூடி இன்னொன்னு ஆகிருதே...? இது சினிமாவா, இல்ல சீட்டிங்கா?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்