திரைச்செய்திகள்
Typography

ஒரு காலத்தில் பாலா என்றால் நான் நீ என்று ஓடோடி வந்த அத்தனை ஹீரோக்களும்,

ஆள விடு சாமீயாகிக் கிடக்கிறார்கள் இப்போது. எல்லாம் அடுத்தடுத்து நிகழும் பிளாப்புகள் என்பதால் மட்டுமல்ல, வருஷக்கணக்கில் இழுத்தடிப்பதும், வேறு படங்களுக்கு போக முடியாதளவுக்கு கெட்டப் சேஞ்ச் செய்து முடக்குவதும்தான். தமிழ்சினிமாவின் டாப் ஹீரோக்கள் அத்தனை பேரும், ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று ஒதுங்கிக் கொண்டதால், சிம்பு விஷ்ணு விஷால் ரேஞ்சுக்கு இறங்கி வந்திருக்கிறாராம் பாலா. முதல் கட்டமாக சிம்புவுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருப்பதாக சொல்கிறார்கள். இதற்கிடையில், “யாரும் வேணாம். புதுமுகத்தை வச்சு எடுக்கிறேன்” என்று சூளுரைத்து வருகிறாராம் பாலா. அது கொடுப்பினையா, அல்லது பாலாவின் புகழுக்கான தடுப்பணையா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS