திரைச்செய்திகள்
Typography

இளைய தளபதி விஜய் நடித்துக்கொண்டு இருக்கும்  60வது படத்தின் டைட்டில் பைரவா என்று இறுதி செய்யப்பட்டு உள்ளது. 

பொதுவாக விஜய் நடிக்கும் படங்கள் அனைத்துமே படம் ஆரம்பிக்கப்பட்டு முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில்தான் அவற்றின் டைட்டிலே அறிவிக்கப்படும்.. அதுவரை ரசிகர்களும் மீடியாக்களும் தாங்களாகவே ஒரு ஆளுக்கொரு பெயரை சூட்டி அழகுபார்க்கும் வேலையை செய்துகொண்டிருப்பார்கள்.  

அந்தவகையில் தற்போது பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் அவரது 60வது படத்திற்கு எங்க வீட்டுப்பிள்ளை என்கிற டைட்டில் வைக்கப்பட இருப்பதாக 90 சதவீதம் உறுதியாக சொல்லப்பட்டு வந்தது. மீடியாவிலும் அந்தப்பெயர்தான் புழக்கத்தில் இருந்து வருகிறது.. ஆனால் விஜயோ, தயாரிப்பு நிறுவனமோ அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.  

இந்நிலையில்தான் இந்தப்படத்திற்கு பைரவா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படம் 2017ல் வெளியாக இருக்கிறதாம். படத்தின் டைட்டிலை விநாயகர் சதுர்த்தியான இன்று விஜய் அறிவிக்க இருந்த நிலையில், நேற்றே படத்தின் முதல் லுக்கும், டைட்டிலும் இன்டெர் நெட்டில் லீக்கானது  விஜய் மற்றும் படக்குழுவினரை அதிர்ச்சியடையச் ,செய்துள்ளதாம். இதேபோலத்தான் விஜய் நடித்த புலி படத்தின் டீசரும் சொன்ன தேதிக்கு முன்பாகவே ஆன்லைனில் லீக்கானது குறிப்பிடத்தகது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்