திரைச்செய்திகள்
Typography

பணம் பாதாளம் வரைக்கும் பாயுதோ இல்லையோ? நல்ல நட்புக்கு இடையில் பாய்ந்தால் அவ்வளவும் அதோகதிதான். பாலாவுக்கும் விக்ரமுக்கும் வர்மாவால் பிரச்சனை. அதே வர்மா அண்டு ஆதித்ய வர்மாவால் தயாரிப்பாளருக்கும் விக்ரமுக்கும் கூட பிரச்சனை.

இயக்குனர் பாலாவின் கழுத்தில், காசியில் பிணம் தின்னும் அகோரி ஒருவர் கொடுத்த மாலை கிடக்கிறது. சுமார் 100 பிணங்களிலிருந்து எடுக்கப்பட்ட முதுகெலும்பின் இணைப்புகளால் செய்யப்பட்ட மாலை அது. அப்படிப்பட்டவர் சாபம் கொடுத்தால் பலிக்குமா, பலிக்காதா?

பாலா இயக்கிய வர்மாவை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு ஆதித்ய வர்மா எடுத்து வெளியிட்டார்கள் அல்லவா? படம் படு பிளாப். சுமார் ஏழரை கோடியை தயாரிப்பாளருக்கு தர வேண்டிய நிலையிலிருக்கிறாராம் விக்ரம். அந்த பணத்தை ஜனவரி இறுதிக்குள் தர வேண்டும். இல்லையென்றால் பாலா இயக்கிய வர்மா படத்தை வெளியிடுவேன் என்கிறாராம் அவர்.

வேறு வழியில்லை. படத்தை ரிலீஸ் பண்ணிக்கோங்க என்று கூறிவிட்டாராம் விக்ரம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்