திரைச்செய்திகள்
Typography

பட்டாஸ் படம் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வர இருக்கிறது. ஆனால் பட்டாசாய் கொதிக்கிறது தயாரிப்பு ஏரியா. ஏன்? தனுஷ் அப்படிப்பட்டவரல்ல. ஆனால் அப்படி நடந்து கொண்டாரே என்று கண்ணீர் வடிக்கிறார்கள் சில டெக்னீஷியன்கள்.

பட்டாஸ் பட ஷுட்டிங் குற்றாலத்தில் நடந்தது. தங்கியிருந்த கெஸ்ட் ஹவுசிலிருந்து நடக்கிற தொலைவில்தான் ஷுட்டிங் ஸ்பாட். இருந்தாலும் அவரை நடக்க விடாமல் இன்னோவா காரை ஏற்பாடு செய்திருந்தார்களாம். ம்ஹும்... ஆடி கார்தான் வேண்டும் என்று அடம் பிடித்துவிட்டாராம்.

அப்பறமென்ன? நாளொன்றுக்கு 20 ஆயிரம் வாடகை பேசி நாற்பது நாட்கள் தண்டம் அழுததாம் கம்பெனி! இப்படிப்பட்ட ஹீரோக்கள் அதுவே சொந்த தயாரிப்பு என்றால் நடந்தோ, கட்டை வண்டியிலோ கூட வரத் தயாராக இருப்பார்கள். இதுதான் தமிழ்சினிமாவின் சாபக்கேடு.

BLOG COMMENTS POWERED BY DISQUS