திரைச்செய்திகள்
Typography

‘வடசென்னை’ படத்தை வேண்டாம் என்று உதறிவிட்டு, சிவகார்த்திகேயனின் புதுப்படம் ஒன்றில் கமிட் ஆகியிருக்கும் சமந்தா மீதுதான் ஆயிரம் சந்தேகங்களை பாய்ச்சுகிறது உலகம்.

தனுஷ் வேண்டாம், சிவா வேண்டும் என்றால் ஏதோ உள் குத்து இருக்கு என்றுதானே அர்த்தம்? இது குறித்து யார் கேட்டாலும், “நேரம் வரும்போது சொல்றேன்” என்று நழுவி விடுகிறார் சமந்தா. இந்தப்படத்தின் ஷுட்டிங் ஆரம்பிக்கவே இன்னும் ஆறு மாதம் ஆகலாம் என்ற நிலையில், சமந்தாவின் திருமணமும் அதற்கேற்ப தள்ளிப் போகும் அல்லவா? அப்படியென்றால் நாகசைதன்யாவுடனான காதல் என்னாச்சு? அது தொடர்கிறதா, இல்லையா? என்றெல்லாம் குடுகுடுப்பை ஆட்ட ஆரம்பித்திருக்கிறது ஊர். சமந்தா என்ன சொல்கிறார்? “என் வாழ்க்கையை எப்படி அமைச்சுக்கணும்னு எனக்குத் தெரியும். கொஞ்ச நாள் நிம்மதியா என் வேலையை பார்க்க விடுறீங்களா?” என்று. அதுவும் சர்தேன்... 

BLOG COMMENTS POWERED BY DISQUS