திரைச்செய்திகள்
Typography

ஆதித்ய வர்மாவின் படு தோல்வி கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டதாம் துருவ் விக்ரமை. விட்டுப்போன படிப்பை முடிச்சுட்டு வர்றேன் என்று லண்டனுக்கு கிளம்பி போயிருக்கிறார்.

இருந்தாலும் தும்பை செடிய தொட்டு வணங்குனா போதும் என்று கூட்டம் அவர் வீட்டை சுற்றி சுற்றி வருகிறதாம். என்னவாம்? ரசிகர் மன்றம் வைக்கிறேன். துட்டுக் கொடுங்க என்றுதான்! இதுக்கெல்லாம் மசியற ஆளா சீயான்?

இதற்கிடையில் தனக்கு வர வேண்டிய பாக்கிக்காக ஒரு விபரீத முடிவை எடுத்திருக்கிறார் ஆதித்ய வர்மா, மற்றும் பாலாவின் வர்மா பட தயாரிப்பாளர். அதன்படி வர்மா படத்தையும் வெளியிடப் போகிறாராம். அது தியேட்டர்களில் அல்ல. அமேசான் டிஜிட்டல் தளத்தில்.

இதற்காக பெரும் தொகை ஒன்றை வெட்டவும் முன் வந்திருக்கிறதாம். சேனல். கிட்டதட்ட பத்து கோடி நஷ்டத்தை முக்கால்வாசியாவது திருப்பிக் கொடுக்கும் என்று நம்புகிறார் இவர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS