திரைச்செய்திகள்
Typography

சினிமா சங்கங்கள் அத்தனையும் ஒரேயடியாக சண்டைக்கு நின்று சட்டையை கிழிக்க வந்தாலும், நான் கிழிச்சதுதான் முதல்ல என்று மூக்கை விடைத்துக் கொண்டு நிற்பவர் அவர்.

இன்னுமா புரியல? முக்கால்வாசி சினிமா தயாரிப்பாளர்களுக்கும், ஹீரோக்களுக்கும் பெரும் தலைவலியாக இருப்பது ‘ப்ளூசட்டை’ என்ற பெயரில் யு ட்யூபில் உலாவரும் சினிமா விமர்சகர் மாறன்தான்.

எல்லா படங்களையும் இழுத்துப்போட்டு வெளுக்கும் இவரது விமர்சனத்தை மில்லியன் கணக்கில் ரசிக்கிறார்கள் சினிமா ரசிகர்கள். இந்த நிலையில் அவரே ஒரு படத்தை இயக்கினால் எப்படியிருக்கும்? இன்டஸ்ட்ரியின் கழுகுக் கண்கள் ‘ரிலீசாகட்டும். வச்சுக்குறோம் கச்சேரியை...’ என்று இவரையே கவனித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் அவர்தான் படு ஸ்மார்ட் ஆச்சே? தன் படத்திற்கு ‘ஆன்ட்டி இண்டியன்’ என்ற தலைப்பு வைத்திருக்கிறார். படம் தியேட்டருக்கு வந்தா போதும். ஓட வைக்கிற வித்தையை பி.ஜே.பி பார்த்துக்கும் என்ற நம்பிக்கையோ என்னவோ ?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்