திரைச்செய்திகள்
Typography

கணக்குக்கு விடை உண்டு. கனவுக்கு விடை உண்டா? அப்படிதான் ஆகியிருக்கிறது இந்த விவகாரமும். ரஜினியையும் கவுதம் மேனனையும் இணைத்து ஒரு படத்தை தயாரித்துவிடலாம் என்று கணக்கு போடுகிறாராம் கல்வித்தந்தை ஐசரி.

ஆனால் அதற்கு ‘ஐ... சரி...’ என்று ரஜினி சொல்லணுமே? அங்குதான் சிக்கல்! இவர் தயாரித்த ‘கோமாளி’ படத்தில்தான் ரஜினியின் அரசியல் என்ட்ரி குறித்து நக்கலாக பதிவு செய்திருந்தார்கள். பிறகு ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பை தொடர்ந்து அக்காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டது.

இப்போது அதே தயாரிப்பாளருக்கு ரஜினி கால்ஷீட் கொடுப்பாரா? ஆனாலும் ரஜினி சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு தானே முன் வந்து பணத்தை கொட்ட விரும்புகிறாராம் ஐசரி. ரஜினி ரசிகர்களின் உதவி திட்ட விவகாரங்களில் தானே மூக்கை நுழைத்து பணத்தை தட்டி விடுகிற வேலைகளையும் ஆரம்பித்திருக்கிறார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS