திரைச்செய்திகள்
Typography

தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களுடன் கடலை போடுவதே கடமை என்று வாழும் அநேக ஹீரோக்களில் விஜய் சேதுபதி மட்டும் வித்தியாசமானவரா என்ன? இல்லை. இல்லவே இல்லை.

அப்படிப்பட்டவருக்கு சங்கத்தமிழன் நேரத்தில் தர்ம சங்கடம். சரளமான ஆங்கிலம் சத்தியமாக வராது விஜய்சேதுபதிக்கு. ஆனால் தும்மினாலும் ஆங்கிலத்தில்தான் தும்முவார் ராக் ஷி கண்ணா. இருவரும் சேர்ந்து நடித்தால் என்னாகும்? வண்டி வண்டியாக பேச ஆசை இருந்தும் வாய்மூடி மவுனியாக இருந்தாராம் விசே.

ஸ்பாட்டில் பல நேரம் இருவரும் மோட்டுவளையை பார்த்தபடியே அமர்ந்திருப்பதை இப்பவும் மிமிக்ரி செய்து சந்தோஷப்படுகிறார்கள் ‘சங்கத்தமிழன்’ படத்தில் பணியாற்றியவர்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்