திரைச்செய்திகள்
Typography

‘ஆதித்ய வர்மா’ ரிலீசுக்குப் பின் ஆசுவாசமாகிவிட்டார் விக்ரம் என்று நினைத்தால் அதுதான் இல்லை. நாலாபுறமும் டென்ஷன். படமும் படு பிளாப்.

கடும் எரிச்சலுக்குள்ளான தயாரிப்பாளர் சென்னையை விட்டே வெளியேறிவிட்டார். கடன் பழிசல்களை விக்ரமிடம் கேளுங்க என்றதுதான் அவரது கடைசி வார்த்தை.

இதற்கிடையில் துருவ்வின் நடிப்பு குறித்து நாடே நின்று பாராட்டுவதுதான் கஷ்டத்திலும் ஒரு ஆறுதல். இருவரது பணமும் எக்கச்சக்கமாக இந்தப்படத்திற்குள் முடங்கிக் கிடக்கிறது.

பணம் என்றால் பஞ்சும் இரும்பாகுமே, அப்படி இரும்பாகிவிட்டார்களாம் விக்ரமும் தயாரிப்பாளரும். இதையெல்லாம் கண்டு ஒரு ஜீவன் சந்தோஷப்படுகிறதாம். அது.... பாலா!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்