திரைச்செய்திகள்
Typography

கூரையை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்துப் போடுகிற வேலையை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்கள். பிறகு மழை புயலுக்கு எங்கு போய் ஒதுங்குவார்களோ, அவர்களுக்கே வெளிச்சம்.

இந்த கதையை கேளுங்கள். சமீபத்தில் வெளிவந்த சங்கத்தமிழன் படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டது. இயக்குனரும் ஹீரோவும் சேர்ந்து கொண்டு சொன்ன பட்ஜெட்டை விட சுமார் பத்து கோடி ரூபாயை அதிகப்படுத்திவிட்டதாக புலம்புகிறார்கள். படமும் படு திராபை!

ஆரம்பிக்கும் போதே முழு ஸ்கிரிப்டும் வேண்டும் என்று கூறப்பட்டதாம் தயாரிப்பு தரப்பில். இதோ அதோ என்று இழுத்தடித்த டைரக்டர், பூஜையன்று ஒரு பைண்ட்டிங் செய்யப்பட்ட புத்தகத்தை கொண்டு வந்து வைத்தாராம். படையல் முடிந்து எடுத்துப்பார்த்தால் அத்தனையும் வெள்ளை பேப்பர்! ஏமாற்றியது தயாரிப்பாளரை அல்ல என்று அவருக்கு இப்போதாவது புரிந்திருக்கும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்