திரைச்செய்திகள்
Typography

நம்மைப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு, அவர்கள் வாழ்க்கை மீது வெறுப்போ அல்லது கஷ்டமோ இருந்திருக்கும். அதற்குத் தீர்வு காணமுடியா ஆற்றாமையை, கோபங்களை சமூக வலைத்தளத்தில் விமர்சனங்களாக வைத்துத் தீர்த்துக்கொள்கிறார்கள். அவர்களின் இயலாமை கண்டு நான் பரிதாபப் படுகின்றேன் என்கிறார் அதிதி ராவ்.

சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்பவர்களை விட்டு நாம் ஓடிப்போய்விட முடியாது. அவர்கள் எவ்வளவு எதிர்மறையாக விமர்சித்தாலும் அதை நேர்மறையாக எடுத்துக் கொள்ளவதுதான் நல்லது. அடுத்தவர்களை விமர்சிக்கிறவர்கள் ஏதோ ஒரு பிரச்சினையால் வேதனைப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

அவர்களுக்காக பரிதாபப்படவும், பிரார்த்தனை செய்யவுமே முடியும். அதைத்தான் நான் செய்து வருகின்றேன் என்கிறார் அதிதி. இந்திய அரச வம்சாவளியைச் சேர்ந்த அதிதி ஹிந்தியிலும் தமிழிலும் பிரபல இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்துள்ளார். இயக்குனர் மணிரத்தினத்தின் ' காற்றுவெளியிடை" " செக்கச் சிவந்த வானம் " படங்களின் நாயகி ஆவார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்