திரைச்செய்திகள்
Typography

படம் ஷுட்டிங்கிலிருக்கும் போது கூட இவ்வளவு ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவ்வளவு பெரிய ஹிட்டடித்துவிட்டது அசுரன். இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப் போகிறார்கள்.

தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். இங்கு மஞ்சுவாரியர் நடித்த ரோலில் யாரை நடிக்க வைப்பது? சாய்ஸ் அனுஷ்காதான்! அவரோ, ‘நான் இன்னும் ஹீரோயினாதான் நடிச்சுட்டு இருக்கேன். அதுக்குள்ள எதுக்கு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகணும்?’ என்றாராம்.

ஸ்ரேயா பக்கம் லுக் அடிக்கிறார்கள். கவர்ச்சியின் எல்லைக்கே போய் கண் கூச வைத்துக் கொண்டிருக்கும் இவரை இந்த கேரக்டருக்குள் பொருத்திவிட்டால் அதுதான் சாதனை!

நல்லவேளை... தமிழ் படங்களில் மட்டும் கவர்ச்சியை கொட்டி வந்த ஸ்ரேயா, நேரடி தெலுங்கு படங்களில் அந்தளவுக்கு அவிழ்த்துப்போட்டதில்லையாம். அந்த முடிவு இப்போது கை கொடுக்கும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்