திரைச்செய்திகள்
Typography

அறம் படத்தின் வெற்றிக்குப் பின், தானே கதை கேட்டு, தானே முடிவெடுக்க ஆரம்பித்தார் நயன். பெரும்பாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக இருந்தன அவை. ஆனால் அவ்வளவு உஷார் தனமும் எங்கிட்டு போச்சு என்று அவரது தீவிர ரசிகர்களே நினைக்கிற அளவுக்கு போய்விட்டது நிலைமை.

தனக்கு முக்கியத்துவமில்லாத கேரக்டர்களில் நடிப்பதில்லை என்று பிடிவாதமாக இருந்த நயன்தாரா ‘பிகில்’ படத்தில் எப்படியோ ஏமாந்துவிட்டார். தன்னை இன்னும் அழகாக காட்டியிருக்கலாம் என்கிற வருத்தம் கூட இருக்கிறதாம் அவருக்கு. அதையெல்லாம் ‘தர்பார்’ படத்தில் சரிகட்டி விட்டதுதான் நயனின் உஷார் மூளை.

கேமிராமேன் தயவில் ஒரு தேவதை போல காட்டப்பட்டுள்ளாராம் அவர். இந்தப்படத்தில் ஒப்பந்தம் ஆவதற்கு முன்பே கேமிராமேனிடம் இது குறித்து அவர் பேசியதாகவும் தகவல். எவ்வளவு உயரத்திற்கு போனாலும் கொஞ்சம் அசந்தா பேக் பண்ணிடுவாங்க போல!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்