திரைச்செய்திகள்
Typography

ஒரு காலத்தில் தங்கத்தால் ஆன உறுப்பினர் அட்டை கொடுத்து கவுரவித்தார்கள் இயக்குனர்கள் சங்கத்தில். அப்படியொரு பெருமைக்குரிய இயக்குனராக இருந்த அகத்தியனின் இன்றைய நிலைமை பரிதாபத்திலும் பரிதாபம்.

ஒரு இயக்குனரோ, எழுத்தாளரோ எப்படி சும்மாயிருக்க முடியும்? எப்படியோ ஒரு கம்பெனியில் கதை சொல்லி, மலை சத்தம் என்ற படத்தை இயக்கி வந்தார். இப்போது அதில்தான் திடீர் பஞ்சாயத்து. ஷுட்டிங் சமயத்தில் இவர் தந்த குடைச்சலா, அல்லது வேறு ஏதாவது ஒன்றா, தெரியாது. அகத்தியனை படத்தை விட்டே தூக்கிவிட்ட தயாரிப்பு தரப்பு, அவருக்கு பதிலாக வேறொருவர் பெயரை போட்டு படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கிவிட்டது. அகத்தியனிடம் வெகு காலம் உதவியாளராக இருந்த ஒருவரே, இந்த துரோகத்துக்கு துணை போவதாகவும் பேச்சு.

BLOG COMMENTS POWERED BY DISQUS