திரைச்செய்திகள்
Typography

வணிகர் சங்க அமைப்பினரின் எதிர்புக்கு ஆளாகியுள்ள நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசியுள்ளார்.மளிகை பொருட்களை ஆண்லைன் வர்த்தகத்தின் மூலம் விற்பனை செய்யும் செயலிக்கான விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

அவரது இச் செயலுக்கு எதிராக வணிகர் அமைப்புக்கள் போராடத் தொடங்கின. சிறு வியாபாரிகளுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள செயலியை விஜய் சேதுபதி விளம்பரப்படுத்தியது தவறு என்றும், அதனை தடைசெய்ய வேண்டும் எனவும் கூறிப் போராடத் தொடங்கினர். விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு வணிகர்கள் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பில் இதுவரை சினிமாப் பிரபலங்களோ, அரசியற் தலைவர்களோ இது தொடர்பில் கருத்துக்கள் எதுவம் சொல்லாத நிலையில், நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் விஜய் சேதுபதிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.

விளம்பரத்தில் நடிப்பது நடிகர்களின் உரிமை. அதைத்தடுக்க முடியாது. ஆன்லைன் வர்த்தகம் பாதிப்படையும் என்றால் அதற்கான சீரமைப்பினை, மத்திய மாநில அரசுகள்தான் மேற்கொள்ள வேண்டும். அதற்கான கோரிக்கையை அரசுகளிடமே முன்வைக்க வேண்டும் அதுவே முறையானது என அவர் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்