திரைச்செய்திகள்
Typography

தீபாவளிக்கு வெளியாகி, தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நடிகர் விஜயின் நடிப்பில் உருவாக ' பிகில்' திரைப்படம் சுமார் 100 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

விஜய் 50 கோடி ரூபா சம்பளமும், இயக்குநர் அட்லீ 25 கோடி ரூபா சம்பளமும், நயன்தாரா 5 கோடி ரூபாவும், ஏ.ஆர். இரகுமான் 4 கோடி ரூபா சம்பளமும் பெற்றுக் கொண்ட இத் திரைப்படத்தினை 160 கோடி ரூபாய் செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து, 3 கோடி ரூபா செலவில் பப்ளிசிட்டி செய்து, 194 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தது. இதன் மூலம் சுமார் முப்பது கோடி ரூபாய்களை இந் நிறுவனம் இலாபமாகப் பெற்றுக் கொண்டது.

இதனை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களும் இதேபோல் இலாபம் கண்டிருப்பதாகவும் தகவ்லகள் தெரிவிக்கின்றன. திரைப்படம் வெளியான பத்து நாட்களின் வசூல் விபரங்களின்படி, இதுவரை வெளியிட்ட இடங்கள் அனைத்திலுமாக மொத்தம் 260 கோடிகளை வசூலித்திருப்பதாகத் தெரிய வருகிறது.

இந் நிலையில் இத்திரைப்படம் இன்னமும் திரையரங்ககளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதனால் அதன் வசூல் மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 'பிகில்' வசூலில் சாதனை படைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்