திரைச்செய்திகள்
Typography

ஜெயலலிதாவின் உண்மைக் கதையினை ஒட்டி, திரைப்படம், மற்றும் இணையத் தொடர் என்பவற்றை இயக்கும் இயக்குநர்கள் மூவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கொன்றினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளதாக அறிய வருகிறது.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், கங்கனா ரனா‌வத் நடிக்கும்‌ 'தலைவி' எனும் தமிழ் திரைப்படம், நித்யா மேனன் நடிப்பில் ’த அயர்ன் லேடி’ எனும் விஷ்ணுவர்தன் இந்தூரி படம், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'குயின்' எனும் இணையத் தொடர் என்பன, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு தயாராகின்றன.

ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்தவற்றின் விவரங்கள், அவரது உறவினர் என்ற வகையில் தமக்குத் தெரியும் என்பதால், மேற்படி படங்களின் கதைகளில் தங்களது குடும்ப விஷயங்களைத் தவறாகச் காட்சிகள் சித்திரிக்கப்படலாம் என்னும் அச்சத்தினைத் தெரிவித்து தீபா இவ்வழக்கினைத் தொடுத்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி, இயக்குநர் கவுதம் மேனன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்