திரைச்செய்திகள்
Typography

அமெரிக்காவுக்கு போன விக்ரம், அங்கு அலட்டிய அலட்டலை புட்டு புட்டு வைத்திருந்தார் பிரபல பத்திரிகையாளர் பிரகாஷ் எம். ஸ்வாமி. அவரது முக நூல் பதிவு வைரலாகி, திரும்புகிற இடத்திலெல்லாம் விக்ரமுக்கு அர்ச்சனை. வேறொன்றுமில்லை.

ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர திருநாளை அமெரிக்காவில் கொண்டாடிய இந்தியர்கள், அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைத்த இடத்தில்தான் இப்படியொரு வம்பு விக்ரமுக்கு. இங்கு தன் பெயர் நாறியதை அறிந்த விக்ரம், மீண்டும் தன்னை அழைத்தவர்களுக்கே போன் போட்டு அழ, எப்படியோ அங்கிருந்து ஒரு விளக்கக்கடிதம் வந்தது. அதில், விக்ரம் நல்லாதான் நடந்து கொண்டார். நீங்கள் கேள்விப்பட்டதெல்லாம் பொய் என்றிருந்தது.

பிரச்சனை சற்றே ஓய்ந்த நிலையில், நேரில் போய் பொங்கினால்தான் நிம்மதி என்று நினைத்தாரோ என்னவோ? மீண்டும் அதே ஊருக்கு கிளம்பிப் போய்விட்டார் விக்ரம். வளரும் விஞ்ஞான யுகத்தில் தனியொரு நபரே மீடியா என்றான பின், அலட்டலை குறைங்க நடிகர்களே.... அதுதான் எல்லாருக்கும் நல்லது.

BLOG COMMENTS POWERED BY DISQUS