திரைச்செய்திகள்
Typography

கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித், மற்றுமொரு ரஜினி படத்தை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கபாலி படத்தின் பிரமாண்ட வசூல், ரஜினியின் மருமகன் தனுஷின் பிசினெஸ் மூளைக்குத் தீனி போட்டுள்ளது.

உடனடியாக இயக்குனர் ரஞ்சித்தை அழைத்து, தமது மாமனார் ரஜினியை வைத்து மற்றும் ஒரு படத்தை தமது தயாரிப்பில் இயக்க வாய்ப்பு வழங்கியுள்ளார். விஷயம் இப்படியிருக்க, எந்திரன்  இரண்டாம் பாகத்தை முடிக்கும் ரஜினிகாந்த் ரஞ்சித் படத்தில் நடிக்கத்  தயாராகவும் உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ள நிலையில், தனுஷ் தயாரிக்க உள்ள படத்தில் நடிகை அமலா பால் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

ஆனால், ஏற்கனவே அமலாபால் விவாகரத்துக்கு தனுஷ்தான் காரணம் என்று பரவலாக பேச்சு உள்ள நிலையில், ரஜினி அமலாபாலுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதில் ஐஸ்வர்யா தனுஷிற்கு உடன்பாடில்லை என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் அமலாபால்தான் ஜோடி எனும் தகவலும், ரஞ்சித் கபாலி படத்தின் இரண்டாம் பாகத்தைத்தான் தனுஷ் தயாரிப்பில் இயக்க உள்ளார் எனும் தகவலும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS