திரைச்செய்திகள்
Typography

எதில் கை வைத்தாலும் வெற்றிதான் என்பதில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருளுக்கு தனி சர்டிபிகேட் தேவையில்லை. அவரே இப்போது சினிமா ஹீரோ ஆகிவிட்டதால் கோடம்பாக்கத்தில் ஒரே ஆச்சர்ய அலைகள்.

விளம்பர பட இயக்குனர்களான ஜே.டி.ஜெர்ரி இரட்டையர்களின் இயக்கத்தில் உருவாகப் போகும் இப்படத்தின் பட்ஜெட் சுமார் 100 கோடி என்கிறார்கள். 2020 ல்தான் ரிலீஸ் என்கிற இலக்கை நோக்கி அடி எடுத்து வைத்திருக்கும் இப்படக்குழு கிராபிக்ஸ் தொழில் நுட்பத்திற்காக மட்டும் சுமார் ஐம்பது கோடியை அள்ளி இறைக்கப் போகிறதாம்.

இந்தப்படத்தின் உயரம் தெரியாமல் ஓடிப் பதுங்கும் கதாநாயகிகள் ரிலீஸ் நேரத்தில் கதறப் போவது உறுதி. முக்கியமாக நயன்தாரா, தமன்னா, ஹன்சிகா உள்ளிட்ட நாயகிகள். ஏன்? அருளோடு ஜோடி போட்றதா என்று ஓட்டமெடுத்தவர்களாச்சே?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்