திரைச்செய்திகள்
Typography

நன்றியை வெற்றிலை போல மடித்து கடித்துத் துப்பும் ஊரில் முதலிடம் கோடம்பாக்கத்திற்குதான். சமீபத்திய உதாரணம் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

எத்தனையோ பிரமாண்ட படங்களையும், கோடி கோடியாக நடிகர் நடிகைகளுக்கு சம்பளத்தையும் அள்ளி இறைத்தவர் அவர். கடும் கடன் பிரச்சனை காரணமாக கம்பெனியை மூடிவிட்ட ஆஸ்கர் ரவிச்சந்திரன், கடைசியாக திவால் நோட்டீசையும் கொடுத்துவிட்டார்.

இது குறித்து பேரதிர்ச்சியோடு விவாதிக்கும் சினிமாக்காரர்கள் அவரை நேரிலோ, போனிலோ சந்தித்து ஒரு ஆறுதல் கூட சொல்லாததுதான் அதிர்ச்சி. அவரிடம் கை நீட்டி சம்பளம் வாங்கியவர்கள் கூட அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவில்லையாம். அவர் கேட்ட ஆயிரம் சினிமாக்கதைகளில் ஒரு சீன் கூட இப்படி இருந்திருக்காது!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்