திரைச்செய்திகள்
Typography

சாதி, இனம், இரண்டையும் கடந்ததுதான் தமிழ்சினிமா என்று யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அந்த நினைப்பில் வண்டி வண்டியாக குப்பையை கொட்டலாம்... தப்பில்லை!

பிரபல இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் ‘ஹீரோ’ என்ற தலைப்பை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்தார். அதை பிற்பாடு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்காக கொடுத்தும் விட்டார்.

கட்... இதே தலைப்பில் நான்கு மொழிகளில் படம் எடுத்துவரும் விஜய் தேவரகொண்டா தன் தெலுங்கு மணவாடு விஷாலிடம் சொல்லி, ‘அந்த தலைப்பு தனக்கு வேணும்’ என்றாராம். உடனே விஷால் இன்னொரு தெலுங்கரான எஸ்.எஸ்.துரைராஜிடம் பேசி, ‘என்ன பண்ணுவீங்களோ தெரியாது. குமரனிடம் இருக்கும் தலைப்பு ஒப்புதல் கடிதமே போலி என்று அறிவியுங்கள்’ எனக் கூறினாராம்.

அப்போது செயலாளராக இருந்த எஸ்.எஸ்.துரைராஜ் அப்படியே செய்ய... குமரனின் வசமிருக்கும் கடிதத்தை பொய்யாக்கக் கிளம்பிவிட்டார்கள். அந்தக்கடிதத்தில் விஷாலின் ஒரிஜனல் கையெழுத்தும் இருப்பதுதான் வேடிக்கை!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்