திரைச்செய்திகள்
Typography

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடிக்கும் "தர்பார்" பட படப்பிடிப்பின் இறுதிநாளில், படப்பிடிப்புத் தளமே நயன்தாரா தர்பாராக மாறியதாகத் தெரிவிக்கிறார்கள். நடந்தது என்ன ?

நடிக நடிகைகளின் சம்பளப் பாக்கிகள் பெரும்பாலும் இறுதிநாள் படப்பிடிப்புக்கு முன்னதாக வழங்கப்பட்டுவிடுவதுதான் நடைமுறை. ' தர்பார்' படத்தில் நயன்தாராவின் சம்பளப்பாக்கி அவ்வாறு கொடுக்கப்படவில்லை என்பதால், பாக்கியைக் கொடுத்தால்தான் நடிக்க வருவேன் என நயன்தாரா முடிவாகச் சொல்லிவிட்டார்.

அன்றையதினம் விடுமுறையானதால் உடனடியாக பாக்கியைக் கொடுக்க முடியாது தயாரிப்பு நிறுவனம் சார்ந்தவர்கள் தடுமாறியிருக்கிறார்கள். ஆனாலும் நயன்தாரா முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இறுதியாக பாக்கித் தொகைக்கான பொறுப்பினை இயக்குனர் முருகதாஸ் எடுத்துக்கொள்ள, இருக்கைவிட்டு எழுந்து வந்தாராம் நயன்தாரா.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்