திரைச்செய்திகள்
Typography

இப்போது எல்லாருடைய கண்ணும் சிவகார்த்திகேயனை நோக்கிதான்! அவருடைய பளிச் பளிச் எல்லாருடைய கண்களையும் பறித்து வரும் நேரத்தில், மேலும் மின்னிக் கொண்டிருக்கிறார் மனுஷன். “கொஞ்சம் கொஞ்சமா முன்னேறலாமே, எதுக்கு ஒரே நேரத்துல?” என்கிற குரலுக்கும் பஞ்சமில்லை.

கிட்டதட்ட சொந்தக்கம்பெனி என்கிற முடிவை அவர் எடுத்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததுதான். வரிசையாக மூன்று படங்களை தயாரித்து வரும் அவரோ, அல்லது அவரது நிழலோ, இன்னும் கொஞ்ச படங்கள் வந்த பின் இந்த ஆட்டத்தை வைத்துக் கொள்ளக் கூடாதா என்றும் குமுறுகிறார்கள் இங்கே. இந்த குமுறலை இன்னும் அதிகப்படுத்துவது போல ஒரு செய்தி.

சென்னையில் மட்டும் மூன்று இடங்களில் அலுவலகம் இயங்கி வருகிறதாம் சிவகார்த்திகேயனுக்கு. ஒவ்வொன்றிலும் முப்பதுக்கும் குறையாத ஊழியர்கள். சம்பளங்கள். தமிழ்சினிமா இதற்கு முன் பார்த்த ஆபத்துகள், சிவகார்த்திகேயன் விஷயத்தில் நடக்காமலிருக்க வேண்டும் என்பதுதான் பலரது பிரார்த்தனையாகவும் இருக்கிறது. நல்ல நேரம் வந்தா, நாங்குநேரி பனை மரம் கூட, நார்த் இண்டியாவுக்கு விசிட் அடிக்குமோ என்னவோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS