திரைச்செய்திகள்
Typography

‘ரைசா நரசிம்ம ரெட்டி’ என்ற படம்தான் ஆந்திரா ரசிகர்களின் அடுத்த கவனிப்பு. சுமார் 300 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் சிரஞ்சீவிதான் ஹீரோ. ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி வரைக்கும் வெளியிடப்படுகிறது.

அந்தந்த மொழிகளில் வெளியிடப்படும் படத்தில் அந்தந்த மொழி ஹீரோக்கள் சிரஞ்சீவிக்காக டப்பிங் பேசியிருக்கிறார்கள். கட்... தமிழில் பேச ஒப்புக் கொண்டிருக்கிறார் அரவிந்த்சாமி.

இவர் நேரடியாக நடித்த சதுரங்க வேட்டை2, வணங்காமுடி ஆகிய இரு படங்களுக்கும் டப்பிங் பேசுவதற்காக வேண்டி வேண்டி அழைத்தும் வராதவர் ஒரு டப்பிங் படத்திற்கு இவ்வளவு அக்கறை காட்டுகிறாரே என்று துவம்சம் ஆகிறது கோடம்பாக்கம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்