திரைச்செய்திகள்
Typography

திரையுலகத்தின் பிளாஸ்டிக் பூ த்ரிஷாதான் போலிருக்கிறது. வாடுவதே இல்லை. வயசாவதும் இல்லை. இப்பவும் தேடி வருகிற படங்களையெல்லாம் ஒப்புக் கொள்ளாமல் கெத்து குன்றாமலிருப்பதுதான் த்ரிஷாவின் ஆகப்பெரிய சொத்து.

த்ரிஷாவின் திட்டமிடலுக்கு கிடைத்த வட்ட மெடல்தான் இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பு. பாபநாசம் படத்தின் ஒரிஜனலான த்ரிஷ்யம் பட இயக்குனர் ஜித்து சோசப் தமிழ், மலையாளத்தில் நேரடியாக ஒரு படத்தை இயக்குகிறார். அதில் மோகன்லால், நிவின்பாலி ஆகிய டபுள் ஸ்டார்கள் நடிக்கிறார்களாம். இவர்களில் ஒருவருக்கு ஜோடிதான் த்ரிஷா. அவ்ளோ பெரிய ஜித்து சோசப்பிடமே கதை கேட்ட பிறகுதான் நடிக்க ஒப்புக் கொண்டாராம் இவர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்