திரைச்செய்திகள்
Typography

‘ஒரு பக்கக் கதை’ படத்தில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அந்தப்படம் வரவேயில்லை. அதற்கப்புறம் மேகா நடித்த ஒன்றிரண்டு படங்களும் ஸ்வாகா ஆகிவிட்டாலும், அழகால் பிழைத்துக் கொண்டிருக்கிறார் அவர்.

இப்பவும் மேகா வீட்டு வாசலில் சில பல இயக்குனர்கள் கதை சொல்ல காத்திருப்பதும், முன்னணி ஹீரோக்களின் செல்போனில் முதல் பத்து நம்பர்களில் ஒன்றாக மேகா ஆகாஷின் பெயர் இருப்பதும் தமிழனின் பிழைத்துக் கிடக்கும் புண்ணியங்களில் ஒன்று.

இந்த நிலையில்தான் அவர் நடித்து இப்போ அப்போ என்று வெளிவர காத்திருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா இன்னும் ஒரு வாரம் தள்ளிப் போய்விட்டது. முதல் நாள், முதல் ஷோ... என்று காத்திருந்த மேகா ஆகாஷ் முகத்தில் கவலை ப்ளஸ் சோகம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்