திரைச்செய்திகள்
Typography

தனக்கிருக்கும் கெட்டப் பழக்கம் ஒன்றை தவிர்ப்பதற்காக ட்ரீட்மென்ட்டில் இருக்கிறார் சிம்பு. இதற்காகதான் அவர் தாய்லாந்து சென்றிருப்பதாகவும் தகவல்.

ஆனால் அதையெல்லாம் விட பெரிய கெட்டப்பழக்கம், படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராதது. வந்தாலும் ரெண்டு மணி நேரத்தில் அங்கிருந்து தலை தெறிக்க ஓடிவிடுவது. இப்படி சிம்புவால் நொந்த திரையுலகம், பிளேடை வச்சு மரம் வெட்ட முடியாது என்கிற முடிவுக்கு வந்து அநேக நாளாச்சு.

இந்த நேரத்தில்தான் சிம்புவை வைத்து ‘கோபம்’ என்ற படத்தை இயக்குவதாக இருந்த செந்தமிழன் சீமான், அந்த கதையை அப்படியே ஜி.வி.பிரகாஷிடம் சொன்னாராம். இந்தப்படம் வந்தா நான் ஆக்ஷன் ஹீரோதான் என்று சந்தோஷப்பட்ட ஜி.வி. நானே மியூசிக்கும் போட்டுத் தர்றேன் என்று கூறியிருக்கிறாராம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்