திரைச்செய்திகள்
Typography

உரண்டு புரண்டு உப்பு தின்றாலும், நினைத்த நேரத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வை ரிலீஸ் செய்ய முடியவில்லையே என்று அப்செட் ஆகிவிட்டார் கவுதம் மேனன். அவரை விட அதிக அப்செட் தனுஷுக்கும்தான்.

ஒரே நாள் இரவில் முழு படத்திற்கும் டப்பிங் பேசிக் கொடுத்துவிட்டு லண்டன் சென்றவராச்சே? பதினைந்து கோடி பற்றாக்குறையால் நின்ற படத்தை மீண்டும் கொண்டுவர லண்டனுக்கு கிளம்பிவிட்டார் கவுதம். அங்கென்னவாம்? லைகா அதிபர் சுபாஷ்கரன் நேரில் வரச்சொல்லி அந்த பதினைந்து கோடி வெகுமான பத்திரத்தில் கையெழுத்து கேட்டாராம்.

லைகாவின் உதவியோடு அடுத்த வாரம் திரைக்கு வருகிறது எ.நோ.பா.தோ! கவுதம் மேனன் லைகாவிடம் வாங்கிய இந்த கை மாத்துக்கு பதிலென்ன? சூர்யா, விஷால் இவ்விருவரும் லைகாவுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவரை வைத்து ஒரு படம் இயக்கித் தருவாராம் இவர். ஆறும் ஆறும் நூறு என்கிற கணக்கு சினிமாவில்தான். அசத்துங்கய்யா...

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்