திரைச்செய்திகள்
Typography

அஜீத், விஜய் படங்கள் தயாரிப்பு நிலையிலிருக்கிற போதெல்லாம் வண்டி வண்டியாக பொய்யுரைகள் எழுதப்படும். ‘பிகில்’ படத்தில் முக்கிய காட்சியில் ஷாரூக்கான் நடிப்பதாக தகவலை பரப்பினார்கள்.

இந்த நிமிஷம் வரைக்கும் இந்த வதந்திக்கு இல்லை என்றோ, ஆமாம் என்றொ மறுப்பு சொல்லாமல் வெறுப்பேற்றி வருகிறார் அட்லீ. ஹெச் வினோத் இயக்குகிற புதிய படத்தில் மீண்டும் அஜீத்தே நடிக்கிறார். அந்தப்படத்தின் டயலாக் பேப்பர் கூட இன்னும் தயாராகவில்லை. அதற்குள் இந்தப்படத்தில் அஜய்தேவ்கான் இருப்பதாக கிளப்பிவிட்டுவிட்டார்கள்.

அஜீத் விஜய் படங்களின் பட்ஜெட்டே ஆளை விழுங்கி ஏப்பம் விடுகிற அளவுக்கு இருக்கிறது. இந்த லட்சணத்தில் மேலும் பல கோடிகளை கொட்டி இவ்விரு பாலிவுட் நடிகர்களை உள்ளே வரவழைப்பது சாத்தியமா என்று கூட யோசிக்கவில்லையே ரசிகர்கள்? மே...ன்னு கத்துனா ஆடு. மேயாத..ன்னு கத்துனா தோட்டக்காரன். அவ்ளேதான் ஃபார்முலா!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்