திரைச்செய்திகள்
Typography

‘மாநாடு’ படப்பிடிப்பு எப்பவோ துவங்கி, இந்நேரம் முடிந்திருக்க வேண்டும். ஆனால் சிம்பு ஒவ்வொரு நாளையும் ஏதேதோ காரணங்கள் சொல்லி தள்ளிக் கொண்டே போக, ஒரு கட்டத்தில் இது வேலைக்கு ஆகாது என்பதை புரிந்து கொண்டார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

‘மாநாடு’ படத்தில் நடிப்பதாக வாக்குறுதி கொடுத்த சிம்பு, இரண்டு கோடி அட்வான்சும் வாங்கிவிட்டார். ஆனால் அக்ரிமென்ட் அடித்து கையெழுத்துப் போட்டுத் தரவேண்டும் அல்லவா? அங்குதான் ஏகப்பட்ட கண்டிஷன்களை அவிழ்த்துவிட ஆரம்பித்தார். படப்பிடிப்புக்கு போகா விட்டால் கொஞ்சம் நஷ்டம். படப்பிடிப்புக்குப் போனால் மண்டை கொள்ளா நஷ்டம். இதில் எது பெருசு என்று தீர்கமாக முடிவெடுத்த மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சுட சுட ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டார்.

மாநாடு விஷயத்தில் நடந்ததென்ன என்று மக்களுக்கு சொல்வதுடன், சிம்பு எப்படிப்பட்டவர் என்பதையும் அதில் சொல்லிவிட்டார். கிட்டதட்ட ஆறு கோடி ரூபாய் இதுவரைக்கும் செலவாகியிருந்தாலும், வேறு வழியில்லாமல் ‘மாநாடு’ படத்தில் சிம்பு இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். வேறு சில முன்னணி நடிகர்கள் ‘நான் ரெடி’ என்று கூறிவருவதாகவும் தகவல். நிறுத்திய சூட்டோடு, அடுத்த கட்ட நகர்வையும் பரபரப்பாக எடுத்து வருகிறார் அவர்.

அப்படின்னா சிம்பு? ‘நான் கொடுத்த தேதிகளையெல்லாம் அவர்தான் வேஸ்ட் பண்ணிட்டார்’ என்று பொய்யை பரப்ப திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறாராம். ம்... இதையெல்லாம் மட்டும் நல்லா செய்ங்க!

BLOG COMMENTS POWERED BY DISQUS