திரைச்செய்திகள்
Typography

பிகில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் 15 ல் வைத்துவிட வேண்டும் என்று நினைத்தார் விஜய். நடுவில் பாடல்கள் வேறு தானாக கசிந்து தலைவலியை ஏற்படுத்தி வருவதால்தான் இந்த அவசர ஏற்பாடு.

ஆனால் பக்ரீத் முடிந்ததும் வெளிநாட்டுக்கு கிளம்புகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். வர இருபது நாட்களுக்கும் மேலாகுமாம். அதனால் விழாவே தள்ளிப் போய் விட்டது. இந்த முறை மெர்சல் விழா மாதிரி பெரிய அமர்க்களங்கள் இல்லாமல் சிம்பிளாக நடத்துவது என்றும் தீர்மானித்தார்களாம். சின்னதாக துவங்கினாலும், விஜய் பட விழா என்றால் அது தானாகவே பெரிதாகிவிடும் அல்லவா? அதிலும் டி.ஆர் மாதிரி விருந்தினர்களை அழைத்தால் கிழிந்தது லுங்கி. தானாகவே ஊர் பேசும். உலகம் பேசும். எப்படியாவது வந்திருங்க டி.ஆர்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்