திரைச்செய்திகள்
Typography

‘இந்தியன் 2’ மீண்டும் தூசு தட்டப்பட்டது யாரால்? இந்த கேள்விக்கு பலரும் பல விதமாக பதில் சொன்னாலும், உள்ளடங்கிய மர்மம் ஒன்று உண்டு.

யெஸ்... ரஜினியே இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டாராம். இப்ப இருக்கிற சூழ்நிலையில் கமலுக்கு ஒரு படம் வெளி வரணும். அவர் சினிமாவில் முடங்கிப் போறதை என்னால பார்த்துட்டு இருக்க முடியாது என்று நினைத்தாராம். தானே முன் வந்து லைகா அதிபரிடம் பேசி, படத்தை மீண்டும் தூசு தட்ட வைத்திருக்கிறார்.

அவர் நினைத்த மாதிரியே எல்லாம் நடந்தேற... காப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் தன் சந்தோஷத்தை வெளிக்காட்டினார் ரஜினி. ‘இந்தியன் 2 கட்டாயம் வரும். வந்து பெரும் வெற்றி அடையும்’ என்று அவர் சொல்ல, வானதிர கைதட்டல்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS