திரைச்செய்திகள்
Typography

லெஜன்ட் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் சினிமா ஹீரோவாகிவிட்டார்.

இவருக்காக விளம்பர படங்களை எடுத்துத் தரும் ஜேடி-ஜெர்ரி இரட்டையர்கள்தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார்கள். பணம் பாதாளம் வரை பாயும் என்று நினைத்து களத்தில் குதித்தவர்களுக்கு பேரதிர்ச்சி.

அந்தப் பணம் உள் பாக்கெட்டை கூட உபசரிக்கும் நிலையில் இல்லை. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் வந்து முகம் காட்டிய ஹீரோயின்களில் ஒருவர் கூட இவருடன் டூயட் பாட தயாராக இல்லை.

“விளம்பரம் வேற... படம் வேற... எங்க கேரியரை கெடுத்துக்க விரும்பல” என்று முகத்திற்கு நேராகவே முறுக்கிக் கொண்டார்களாம். வேறு வழி? மும்பையில் டேரா போட்டிருக்கிறார்கள். முற்றிலும் புதுமுகமாக இருக்கலாம். இவர்களாவது பரவாயில்லை.

“எத்தனை கோடி வேண்டுமானாலும் தர்றோம். மியூசிக் நீங்கதான்” என்று அனிருத் வீட்டுக் கதவை தட்டியவர்களுக்கு அங்கேயும் அதிர்ச்சி. நோ... என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டாராம் அவர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்