திரைச்செய்திகள்
Typography

காதலுக்காக சினிமாவை ஒதுக்கிவிட்டு வெளிநாட்டிலேயே பழி கிடந்தார் ஸ்ருதிஹாசன். ஐயகோ....

அந்த காதல் ஒரு சுபயோக சுபதினத்தில் முறிந்தது. கண்ணீரும் கம்பலையுமாக சென்னைக்கு வந்தவர், சில நாட்களிலேயே நார்மல் மோடுக்கு வந்துவிட்டார். கதாநாயகி பஞ்சத்தில் தவித்த தமிழ்சினிமா, அண்மைக்காலமாக மழைக்கு பதிலாக வாட்டர் கேன்களை எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில், ஸ்ருதியின் வரவு திருப்தியோ திருப்தி. விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ என்ற படத்தில் கமிட்டானார் ஸ்ருதி. ‘சிந்துபாத்’ படத்தின் படுதோல்வி விஜய் சேதுபதியை நிலைகுலைய வைத்ததுடன் பணம் புரட்டவும் முடியாத நிலைக்கு ஆளாக்கிவிட்டது. ஸோ... ‘லாபம்’ ஷுட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சுண்டைக்காய் மூட்டைக்குள் சூரியன் ஒளிஞ்ச மாதிரி இப்படியா அமையணும் ஸ்ருதியோட ரீ என்ட்ரி?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்