திரைச்செய்திகள்
Typography

நடிகர் சங்க ஊழல் புகாருக்கு நடிகர் விஷால் அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று மறுப்பு தெரிவித்துள்ளார். 

நடிகர் விசாலில் பிறந்த நாளை முன்னிட்டு திருவல்லிகேணியில் குழந்தைகளுக்கான  இலவச மருத்துவ முகாமை நடிகர் விசால் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, நடிகர் சங்கம் மீது வாராகி கூறிய புகார்கள் தவறான குற்றச்சாட்டு, ஆதரமற்றது,அது உணமையாகாது, அவர் ஆதாரங்கள் வைத்திருந்தால் அவற்றை காட்டடும் என்று கூறியுள்ளார்.

 மேலும், எங்களிடம் பழைய நடிகர் சங்க நிர்வாகிகள் செய்த முறைகேடுகளுக்கு ஆதாரம் உள்ளது. அவற்றை 10 நாள்களில் வெளியிடுவோம். இதுவரை வாராகி எந்த ஆதராத்தையும் காட்டவில்லை என்றார். மேலு நடிகர் சங்க கட்டிட டெண்டரில் முறைகேடு நடந்தாக குற்றம் சாட்டப்படுகிறதே என்ற கேள்விக்கு, இன்னும் கட்டிடத்திற்கு டெண்டரே விடப்படவில்லை என்றும், இன்னும் சி.எம்.டி.ஏ.ஒப்புதலுக்குதான் காத்திருப்பதாகவும் விஷால் தெரிவித்தார்.  

நடிகர் சங்கம் மீதான கணக்குகளை எந்த உறுப்பினர்கள் கேட்டாலும் காட்ட தயாரக  இருக்கின்றோம் என்றார். தாணு ஒரு வாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருந்தாரே என்ற கேள்விக்கு, நான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. இந்தநிலையில் எதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும். தாயரிப்பாளர் சங்கத்தில் இருந்து எனக்கு எந்த கடிதமும், நோட்டீசும் வரவில்லை. ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால்  அவரிடம் விளக்கம் கேட்டு அதன்பிறகு  நடவடிக்கை எடுக்க முடியும் ஆனால் அவர்கள் தங்களாகவே கூட்டம் கூட்டி அறிவித்துள்ளார்கள். எதுவாக இருந்தாலும் சந்திக்க தயாரக உள்ளேன். என்று விஷால் தெரிவித்தார்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்