திரைச்செய்திகள்
Typography

‘ஆடுகளம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகம் ஆன டாப்ஸி, அதற்கப்புறம் முன்னணி ஹீரோக்களின் ஆறுதல் கிட்டாமல் முன்னேறவே முடியாமல் தவித்து வந்தார்.

நல்லவேளை... இந்தி தெலுங்கு என்று வாரியணைத்துக் கொண்டது அந்தந்த இன்டஸ்ட்ரி! இப்போது மீண்டும் தமிழுக்கு வரப்போகிறார் டாப்ஸி. கருணை கரம் நீட்டியவர் ஜெயம் ரவி. பொதுவாகவே ஜெயம் ரவி படத்தில் யார் ஹீரோயினாக நடித்தாலும் அவர் தன்னுடைய நண்பர்களான ஆர்யா, விஷால் படங்களில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்துவிடுவார். அப்படியிருக்க... டாப்ஸிக்கு இன்னும் இரண்டு வருஷமாவது எக்ஸ்பயரி தேதி தள்ளுபடியாகும் என்று நம்புவோமாக!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்