திரைச்செய்திகள்
Typography

முன்னணி ஹீரோக்கள் ஒரு கட்டத்தில் தேங்கி திணறுகிற அளவுக்கு கதை பஞ்சம் தலை விரித்து ஆடும்.

அப்படியொரு இக்கட்டில் சிக்கிக் கொண்டிருக்கிறார் விஜய். அட்லீ படத்திற்கு பிறகு யாருடன் சேர்ந்து படம் பண்ணுவது என்கிற குழப்பம் அவருக்கு தலைவிரித்து ஆடுகிறதாம். மோகன்ராஜா சொன்ன கதை பிடித்திருந்தாலும், அதில் சில கரெக்ஷன்களுக்கு அவர் உடன்படவில்லையாம். வேறு இயக்குனர் தேடினால், ஒருவரும் ஓய்வாக இல்லை.

முருகதாஸ் ரஜினியோடு. எச்.வினோத் அஜீத்தோடு. கார்த்திக் சுப்புராஜ் ரஜினியோடு. டென்ஷன் பார்ட்டியான ஹரிதான் தேறுகிறாராம். ஆனால் அவருக்கு கால்ஷீட் தர விஜய்க்கு விருப்பம் இல்லை. இப்படி போன வழுக்கல் வாழ்வில் நீர் பாய்ச்சி நெடுவயல் கண்டுவிட்டார் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அட்வான்சே கொடுத்துவிட்டதாம்  விஜய் கம்பெனி.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்