திரைச்செய்திகள்
Typography

“அடப்பாவிகளா, நான் பாட்டுக்கு கிடக்கேன். என்னை ஏன்யா வம்புல இழுத்து விடுறீங்க?”

என்று ஆந்திரா பிரஸ்சிடம் அங்கலாய்க்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏன்? கீர்த்தியின் குடும்பமே பா.ஜ.க குடும்பம். அண்மையில் டெல்லி சென்ற மேனகாவும், சுரேஷும் மோடியை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டார்களாம். அது போதாதா? கீர்த்தி சுரேஷ் பி.ஜே.பி யில் சேரப்போகிறார் என்று கொளுத்திப் போட்டுவிட்டார்கள். அதற்குதான் இப்படியொரு ரீயாக்ஷன் கொடுக்கிறார் கீர்த்தி. சரி... இவங்க அம்மாவான மேனகா என்ன சொல்றாங்க? “என் பொண்ணுக்கு அரசியல் ஆசை இருக்கு. ஆனா அரசியலுக்கு வர இது டைம் இல்ல” என்று. சொக்கம்பட்டி போகணும்னா, வாடிப்பட்டியிலேயே வண்டிய கட்றதுதான் சரி. இப்பவே கர்சீப்பை போட்டு வைங்கம்மா...

BLOG COMMENTS POWERED BY DISQUS