திரைச்செய்திகள்
Typography

‘காளி’ படத்தில் விஜய் ஆன்ட்டனிக்கு ஜோடியாக நடித்தவர் ஷில்பா மஞ்சுநாத்.

அதற்கப்புறம் அவர் நடித்த படம் ‘இதயராணியும் இஸ்பேட் ராஜாவும்’. இவ்விரு படங்களுமே மஞ்சுநாத்துக்கு மல்கோவா ருசியை தரவில்லை. ஆனால் இவர் முதன் முதலில் தமிழில் நடித்த ‘பேரழகி’ என்ற படம் இப்போதுதான் ரிலீசாக போகிறது. லோ பட்ஜெட் படம். ஸ்டார் காஸ்ட்டிங் அவ்வளவாக இல்லை. “வாங்க பிரமோஷனுக்கு” என்று அழைத்தார்களாம் இவரை. “நான் இப்போ முன்னணி ஹீரோக்களுடன் நடிச்சுட்டு வர்றேன். இந்த நேரத்தில் இந்த பட பிரமோஷனுக்கு வந்தா என் இமேஜ் என்னாவறது” என்று மறுத்தவர், கடைசி நேரத்தில் கூட மனம் இளகவில்லை. ‘வாலில்லாத பட்டத்திற்கே இவ்வளவு மெதப்பா...?’ என்று ஷாக் ஆகிவிட்டது பேரழகி டீம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்