திரைச்செய்திகள்
Typography

நடிகர் சங்கத் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று ஆரம்பத்தில் முடிவெடுத்த விஷால், அதற்கப்புறம் நிற்க முடிவெடுத்தது ஏன்?

“ஈகோவை டச் பண்ணிட்டாங்க. இனி விட மாட்டேன்’ என்று கூறுகிறாராம் நண்பர்களிடம். முக்கியமாக ஜே.கே.ரித்திஷின் மரணம் விஷாலை இன்னும் சுதந்திரமாக்கிவிட்டது. விஷாலை ஒழித்தே தீருவேன் என்று கடந்த ஆறு மாதங்களாக வோட்டர்களுக்கு வாரி இறைத்துக் கொண்டிருந்த ரித்திஷ், காலமாகிவிட்டார். உதவிகள் தானாகவே ஸ்டாப் ஆகிவிட, அவர்களையே கூட தன் பக்கம் வளைக்க தயாராகிவிட்டாராம் விஷால். வழக்கமாக பைனான்ஸ் வாங்குகிற ஒரு வெளிநாட்டு தொழிலதிபரிடம் இந்த முறையும் போய் நின்றாராம். “ஏற்கனவே உங்க பாக்கி இரண்டரை கோடியை வசூலிக்க முடியாமல் தள்ளுபடி பண்ணிட்டேன். மறுபடியுமா?” என்று முகத்தை தூக்கிக் கொண்டாராம் அவர். இருந்தாலும் பணம் ஆறாக ஓடும். விஷால் மீண்டும் வெல்வார் என்கிறார்கள் ஏரியாவில்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்