திரைச்செய்திகள்
Typography

ஸ்ருதிஹாசனுக்கு காதல் தோல்வி ஏற்பட்டதும் ஒருவகையில் நல்லதுதான் போல.

லண்டன் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார் ஸ்ருதி. அதற்கு கமலும், சரிகாவும் ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்கள். அப்படியிருந்தும் லவ்... டமால்! கடும் மன உளைச்சலோடு சென்னைக்கு வந்த ஸ்ருதி தன் கவனத்தை முழுக்க முழுக்க சினிமாவில் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்துவரும் அவர், கிடாரம் கொண்டான் படத்தில் ஒரு பாடலை பாடவும் செய்திருக்கிறார். தமிழ் படம் ஒன்றுக்கு இசையமைக்கவும் ஆசைப்படுகிறாராம். ஏழரை கட்டையில எல்லா கட்டையும் கரும்புதான்!

BLOG COMMENTS POWERED BY DISQUS