திரைச்செய்திகள்
Typography

ஓட்டல் வாடகை கொடுக்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலினை அறைக்குள் பூட்டி வைத்த சம்பவத்தை யாராவது நம்ப முடியுமா?

தமிழ்நாடாக இருந்தால் கதையே வேற. ரத்தம் தெறிச்சுருக்கும். சம்பவம் நடந்த இடம் பிஜு தீவாச்சே? கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. இதற்காக ஷுட்டிங் போன இடத்தில்தான் இந்த அதிர்ச்சி. தயாரிப்பாளர் கொடுத்த செக் வங்கியில் பணமில்லை என்பதால் திரும்பிவிட்டதாம். அந்த நாட்டை பொருத்தவரை அது மிகப்பெரிய கிரிமினல் குற்றம். அப்புறம்? நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை லாக் பண்ணிவிட்டது ஒட்டல் நிர்வாகம். அப்புறம் உதயநிதியே சென்னைக்கு போன் அடித்து, பிரச்சனையை தீர்க்க வைத்தாராம். சம்பந்தப்பட்ட அந்த புதிய தயாரிப்பாளர் அதற்கப்புறம் ஆளே எஸ்கேப்!

BLOG COMMENTS POWERED BY DISQUS