திரைச்செய்திகள்
Typography

லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், பூவே உனக்காக உட்பட சுமார் ஐந்து படங்களில் விஜய்யை உச்சத்திற்கு கொண்டுபோன நிறுவனம் ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ்.

இந்த நிறுவனம் தனது 100 வது படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது. விஜய் நடித்தால் எப்படியிருக்கும்? மரியாதைக்கு மரியாதை ஆச்சு. கலெக்ஷனுக்கு கலெக்ஷனும் ஆச்சு. இப்படி திட்டமிட்ட சவுத்ரி, விஜய்யை மடக்கிப் போட தொடர் முயற்சி எடுத்து வருகிறார். எதிர்முனையிலிருந்து எள் முனையளவும் ரெஸ்பான்ஸ் இல்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்த சவுத்ரி, முன் அனுமதி இல்லாமலே விஜய்யின் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போய் விட்டாராம். சுமார் இரண்டரை மணி அவரை காக்க வைத்த விஜய், இரண்டரை நிமிஷத்தில் பேசி அனுப்பினாராம். சரி... விஷயம் கை கூடுமா? டவுட்டுதான்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்