திரைச்செய்திகள்
Typography

ஆரம்பித்துவிட்டது கலகம்! நடிகர் கமலுக்கு செவாலியர் விருது வழங்கி கவுரவப்படுத்தியிருக்கிறது பிரான்ஸ் அரசு.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அடுத்த நொடியே நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் அத்தனை பேரும் கிளம்பி கமல் வீட்டுக்கு போய் விட்டார்கள். அவருக்கு வாழ்த்து சொன்னதுடன், விரைவில் ஒரு பிரமாண்ட பாராட்டு விழாவும் நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டார்கள். கமல் பாராட்டப்பட வேண்டியவர்தான். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், ரஜினிக்கு பத்மவிபூஷண் தரப்பட்டு இவ்வளவு மாதங்கள் ஆச்சே? யாராவது ஒரு நடிகர் சங்க நிர்வாகியாவது அவருக்கு பாராட்டு விழா நடத்தணும்னு யோசிச்சாங்களா? ஏன் கமலுக்கு ஒரு வாய். ரஜினிக்கு ஒரு வாய் என்று செயல்படுகிறது சங்கம்? இப்படியொரு கேள்வியை மெல்ல பரவ விடுகிறது நடிகர் சங்கத்தின் ஒரு பிரிவு. மெல்ல கிளம்புகிற இந்த காற்று சூறாவளி ஆவதற்குள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வாங்க நாசர் அண்டு டீம்! 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்