திரைச்செய்திகள்
Typography

சமீபத்தில் திரைக்கு வந்த ‘நெடுநல்வாடை’ படம் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

போட்ட துட்டு ரிட்டன் ஆச்சா என்பதெல்லாம் அப்புறம். ஆனால் திரையுலகத்தின் பாராட்டுகளை தித்திப்பாக எடுத்துக் கொண்டு அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிட்டார்கள் படக்குழுவினர். இந்த நேரத்தில்தான் அந்த நல்ல செய்தி.

நெடுநல்வாடையில் ஹீரோயின் அஞ்சலி நாயரின் நடிப்பை கண்டு அசந்து போன இயக்குனர் பா.ரஞ்சித் அவரை தன் கம்பெனி படங்களில் நடிக்க அழைத்திருக்கிறார். அடிப்படையில் இன்டர்நேஷனல் பிளைட் ஒன்றில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் அஞ்சலி நாயர், ‘பார்க்கலாம்’ என்று கூறியிருக்கிறாராம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்